BSNL-ஆனு பொளக்காதீங்க... தலைவன் வேற ரகம்!! ஏர்டெல், வோடபோன், ஜியோ நிலை இதுதான்?

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (15:32 IST)
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கடந்த கால கட்டத்தில் கிட்டதட்ட 94 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல். 
 
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏர்டெல் நிறுவனம் 47.428 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 47.263 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. 
 
அதாவது இரு நிறுவனங்களும் கூட்டாக சுமார் 94 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. ஆனால், ஜியோ நிறுவனம் புதிதாக 36.577 லட்சம் வாடிக்கையாளற்களையும், பிஎஸ்என்எல் சுமார் 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை அடைந்துள்ளது. 
 
ஜியோவின் அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலைய்லும், ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது கட்டமைப்புகளை பலப்படுத்தி வாடிக்கையாளர்களை வசப்படுத்தி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்