ஏர்டெல் - வோடோபோன் நிறுவனங்களின் புதிய E-KYC சேவை

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (11:01 IST)
முன்பெல்லாம் ஒரு சிம்கார்டு வாங்கினால் அது ஆக்டிவேட் ஆக ஓரிரண்டு நாட்கள் ஆகும். சில சமயம் ஒருவாரம் கூட ஆகும். இந்நிலையில் சிம் வாங்கிய ஒருசில நிமிடங்களில் ஆக்டிவேட் ஆகும் வகையில் புதிய சேவையை ஏர்டெல் மற்றும் வோடோபோன் தொடங்கியுள்ளது. இதற்கு E-KYC என்று பெயர் இடப்பட்டுள்ளது.


 
 
E-KYC சேவை:
 
Know Your Confirmation என்பது E-KYC என்பதன் விரிவாக்கம். ஆதார் கார்டு இருந்தால் அதில் உள்ள விபரங்கள் மூலம், ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டு சிம்கார்டு ஒருசில நிமிடங்களில் செயல்பட தொடங்கும்.
 
இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் இந்த E-KYC சேவையை ஆகஸ்ட் 24 முதல் தொடங்கவுள்ளது.
 
ஏர்டெல் அல்லது வோடோபோன் சிம்கார்டை வாங்க விரும்பினால் உடனடியாக அருகில் உள்ள குறிப்பிட்ட ஷோ ரூமுக்கு செல்ல வேண்டும். தொலைத்தொடர்பு துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் ஆதார் கார்டு விபரங்கள் உடனடியாக ஒருசில நிமிடங்களில் சரிபார்க்கப்படும். 
 
விபரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் எஸ்.எம்.எஸ் வரும். இதிலிருந்து விபரங்கள் வெரிபிகேஷன் செய்யப்பட்டதாக புரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும். இந்த தகவலை வோடோபோன் இந்திய இயக்குனர் சந்தீப் கட்டாரியா உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்