தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துக‌ள் இ‌ந்‌தியா‌வி‌ல் உபயோகம்!

சனி, 15 மார்ச் 2008 (15:53 IST)
அயல் நாடுகளில் தடைசெய்யப்பட்ட 66 வகை பூச்சி மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது!

மத்திய இராசனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பி.ே.ஹான்டிகியூ நேற்று மாநிலங்களவையில எழுத்து‌ப்பூர்வமாக பதிலளிக்கும் போது, மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட அல்லது பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 66 வகை பூச்சி மருந்துகள், இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் டி.ி.ி., என்டோசுல்பன் ஆகியவையும் அடங்கும்.

இந்த பூச்சி மருந்துகளை நமது நாட்டில் பயன்படுத்துவதால் எவ்வித கெடுதலும் இல்லை என்ற பரிசோதனை முடிவுக்குப் பிறகு பயன்படுத்த அனுமதிக்கப்படுகினறன என்று அமைச்சர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்