கரியமில வாயு வெளியேற்றம் 45% அதிகரிப்பு

வியாழன், 22 செப்டம்பர் 2011 (15:11 IST)
புவி வெப்பமடைதலுக்கு முக்கியக் காரணமான கரியமிலவாயு வெளியேற்றம் கடந்த 20 ஆண்டுகளில் 45% அதிகரித்து 33 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

1990ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த 20 ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கரியமில வாயு வெளியேற்றம் முறையே 7% மற்றும் 28% குறைந்துள்ளது.

அம்ரிக்காவின் கரியமிலவாயு வெளியேற்றம் 5% அதிகரித்துள்ளது. ஜப்பான் நிலவரம் ஏறத்தாழ மாறாமலேயே உள்ளது.

ஐரொப்பிய ஆணயத்தின் இணைந்த ஆய்வு மையம் மற்றும் நெதர்லாந்து சுற்றுச்சூழல் மதிப்பீடு கூட்டமைப்புக் கழகம் ஆகியவை வெளியிட்டுள்ள ஆய்வுத் தகவல்கள் ஆகும் இது.

அதிகரித்து வரும் எரிசக்திக் குறைபாடு, மறு ஆக்க எரிசக்தியின் வளர்ந்து வரும் பங்களிப்பு, மற்றும் அணுசக்தி ஆகிய ஆதாரங்கள் இருந்தும் மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் பெருகி வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்படமுடிவதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

2008ஆம் ஆண்டை ஒப்பிடுகையிலும் கூட கரியமிலவாயு வெளியேற்றம் அதிகரிப்பாகவே உள்ளது.

கரியமிலவாயு வெளியேற்றத்தில் சீனா 10%, அமெரிக்கா 4%, இந்தியா 9% அதிகரிப்புடன் பங்களிப்பு செய்து வருகிறது.

தொழிற்துறை நாடுகள் கியோட்டோ ஒப்பந்தங்களின் படி 2012ஆம் ஆண்டிற்குள் 5.2% கரியமிலவாயு வெளியேற்றத்தில் குறைப்பு செய்யவுள்ளது. 1990களின் ஆரம்பங்களில் இந்த நாடுகள் கரியமிலவாயு வெளியேற்றத்தை இந்த நாடுகள் கட்டுப்படுத்தின. 2008- 09 பொருளாதார பின்னடைவு காரணமாக இந்த நாடுகளின் கரியமிலவாயு வெளியேற்றம் குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்