எதிர்பாராத, அபாயமான பருவநிலையை எதிர்பாருங்கள்- ஐ.பி.சி.சி. எச்சரிக்கை

சனி, 19 நவம்பர் 2011 (11:17 IST)
டெக்சாஸ் வறட்சி, தாய்லாந்தின் அபாய வெள்ளம், ரஷ்யாவை உலுக்கிய கடும் வெப்ப அலைகள் என்று உலகம் இனி அபாயகரமான, எதிர்பாராத வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டிவரும் என்று ஐ.நா.வின் சர்வதேச வானிலை மாற்றக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பிரிக்காவில் சந்தித்த விஞ்ஞானிகள், "புவி வெப்பமடைதலின் அபாய விளவுகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தயாரிப்பில்லாமல் இர்ந்தால் உலகின் சில பகுதிகள் வாழ்வதற்கு லாயக்கற்றதாக மாறும் அபாயம் உள்ளது என்று இவர்கள் அச்சமூட்டியுள்ளனர்.

Kஆண்டாவில் உள்ள கம்பாலாவில் நேற்று நோபல் பரிசு வென்ற பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான வானிலை மாற்றக் குழு விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

உலகில் வெப்ப நிலை சராசரியாக உயர்ந்து வருவதன் காரணத்தினால் திடீர் வெள்ளப்பெருக்கு, பஞ்சம், வறட்சி, பெரும்புயல் காற்று ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் அரிதாக நிகழ்ந்து வந்த வெப்ப அலை வீச்சு இனி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளைத் தாக்கும் என்று இவர்கள் கணித்துள்ளனர்.

மழைச் சூறைக்காற்று என்பது முன்பெல்லாம் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஏற்படும் ஆனால் அமெரிக்காவும், கனடாவும் இனிமேல் அதனை அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும்.

தெற்கு ஆசியாவில் அபாயகரமான வெள்ளம் இப்போதிருப்பதைவிட 4 முறை அதிகம் நிகழும் வாய்ப்பிருப்பதாக இவர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மற்றும் ஆக்லஹாமா பகுதிகளில் வெப்ப அளவு 38 டிகிரி செல்சியஸை எட்டியது இத்தனை கணிப்புகளுக்குமான முன்னோடியாகும் என்று இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

1970ஆம் ஆண்டு முதல் இயற்கை சீரழிவுகளால் அதிக உயிரிழப்புகள், சேதங்கள் வளரும் நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக இதில் பங்கேற்ற விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.

எனவே அரசுகள் இயற்கைச் சீற்றங்களுக்கான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லையெனில் சாவு விகிதம் இன்னும் அதிகமாகவே வாய்ப்பிருப்பதாக மற்றொரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு மீண்டும் ஐ.பி.சி.சி. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கூடி விளைவுகளை ஆய்வு செய்யவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்