பிரிட்டனில் உள்ள முன்னணி கடல் ஆய்வு நிபுணர், ஆர்க்டிக் கடலில் பனியே இல்லாத நிலை 2015ஆம் ஆண்டிலேயே ஏற்படும் என்று கூறுகிறார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பீட்டர் வாதாம்ஸ், இது பற்றி கூறுகையில், "ஆர்க்டிக் கடலை மறைத்திருக்கும் பனிப்படர்வுகள் முழுதும் இன்னும் 4 ஆண்டுகளில் மறையலாம்" என்றார் அவர்.
வடக்கு ரஷ்யா மற்றும் கனடா, கிரீன்லாந்து ஆகியபகுதிகளுக்கு இடையே உள்ள பனிப்படர்வுகள் 2015ஆம் ஆண்டு கோடை வெப்பத்தில் காணாமல் போகும் என்கிறார் அவர்.
பருவமாற்றத்திற்கான சர்வதேச அரசுகளுக்கு இடையிலான குழு ஆர்க்டிக் பகுதி பனிப்படலம் பற்றி ஆய்வு செய்து வருகிறது. ஆனால் வாதாம்ஸ் கூறுகிறார் அந்த ஆய்வுகள் எவ்வளவு வேகத்தில் பனி மறையும் என்பதை துல்லியமாகக் கணிக்கவில்லை என்கிறார்.
ஐ.பி.சி.சி. கணிப்பின் படி 2030ஆம் ஆண்டுக்குள் ஆர்க்டிக் துருவத்தில் கடல்பனி உருகிவிடும் என்பதாகும். ஆனால் டாக்டர் மாஸ்லோவ்ஸ்கி என்பாரின் கணிப்பின் படி அவ்வளவு வருடங்கள் ஆகாது என்று கூறப்படுகிறது.
பேராசிரியர் வாதாம்ஸ் மேலும் கூறுகையில், "மஸ்லோவ்ஸ்கியின் ஆய்வு மாதிரி தீவிர நிலையை தெரிவிப்பதாக இருந்தாலும் அவரது மாதிரிதான் இருப்பதில் சிறந்தது, அதன் படி பனி மறையும் விகிதம் சற்று அதிகமாகவும் விரைவாகவும் உள்ளது எனவே 4 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பனியற்ற பிரதேசமாகி விடும்" என்றார்.
மீண்டும் அடுத்த குளிர்காலத்தில் பனிப்படலங்கள் வந்து விடும் என்றாலும் இடையில் கச்சா எண்ணெய் எடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட வாய்ப்பிருப்பதால் அங்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்று கூறுகிறார் வாதாம்ஸ்.
துருவப்பனிக் கரடி என்ற அரிய உயிரினம் இதனால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.