ஜப்பான் புகுஷிமா விவசாய நிலங்களில் அணுக்கதிர்வீச்சின் தாக்கம் தீவிரம்

செவ்வாய், 15 நவம்பர் 2011 (17:19 IST)
பூகம்பம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியான கதிர்வீச்சின் தாக்கம் விவசாய நிலங்களையும், மண்ணையும் கூட தாக்கியிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு புகுஷிமாவில் மண் மாதிரிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அங்கு அபாயமான சீசியத்தின் அளவு ஆபத்து நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் உணவு உற்பத்க்தி "கடுமையாக பாதிக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இடத்தில் உள்ள நிலங்கள் மட்டுமல்லாது அண்டை நிலங்களையும் கதிர்வீச்சுத் தாக்கியுள்ளது என்று இந்த ஆய்வைச் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக புகுஷிமா பகுதியே அணுக்கதிர்வீச்சினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அணுக்கதிர்வீச்சிலிருந்து வெளியான சீசியம் - 137 என்ற அணுப்பொருளுக்கு 30 ஆண்டுகால ஆயுள் உள்ளது. எனவே இது இப்போதைய தலைமுறை மட்டுமல்லாது வரும் தலைமுறைகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண்ணில் உள்ள சீசியம்- 134, சீசியம் - 137-இன் அளவு ஒரு கிலோவுக்கு 5,000 கதிரியக்க நுண்மங்கள் இருப்பதே சட்டபூர்வமான வரம்பாகும் கதிர்வீச்சு இந்த அளவைத் தாண்டி விடக்கூடாது.

ஆனால் கிழக்கு புகுஷிமாவில் இந்த வரம்பைக் கடந்துள்ளது கதிர்வீச்சு நுண்மங்கள் அளவு.

கிழக்கு புகுஷிமா பகுதியில் விவசாய நிலங்களில் சீசியம் - 137-இன் அளவு அதிகமாக இருப்பதால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை மணி ஒலித்தனர் விஞ்ஞானிகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்