என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை!!

செவ்வாய், 15 நவம்பர் 2016 (15:03 IST)
இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 


 
 
தற்போது 125-வது தொழில்நுட்ப பட்டதாரிகள் நுழைவு சேர்க்கையில் பட்டப்படிப்பு படித்த தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
வயது வரம்பு:
 
விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 
 
கல்வித்தகுதி:
 
பி.இ., பி.டெக். போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்களாம்.
 
தேர்வு செய்யும் முறை:
 
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நேர்காணல் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடை பெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். 
 
விண்ணப்பிக்கும் முறை:
 
இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். 7-12-2016-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்