மெ‌ட்‌ரி‌க் த‌னி‌த் தே‌ர்வ‌ர்களு‌க்கு ஹா‌ல் டி‌க்கெ‌ட்

புதன், 11 மார்ச் 2009 (12:14 IST)
சென்னை மண்டலத்தில் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழ‌ங்கு‌ம் மையங்கள் அ‌றிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி மாவட்டத்தின் பெயரு‌ம் அத‌ற்கான விநியோக மைய‌ங்க‌ளி‌ன் பெயரு‌ம் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

செங்கல்பட்டு - வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம்.

காஞ்சிபுரம் - டபிள்யூ.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத்.

பொன்னேரி - டி.ஏ.வி. மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கு.

திருவள்ளூர் - களடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

தென் சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை மற்றும் வடக்கு சென்னை பகுதி தனித் தேர்வர்களுக்கு புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.

மார்ச் 12 முதல் 14 வரை தனித் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் (பொறுப்பு) தே. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்