ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு

புதன், 28 மே 2014 (15:21 IST)
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளார்க் பதவிகளுக்காக வேலை வாய்ப்பு பற்றி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 5092
 
இதில் தமிழகத்திற்கு 373 இடங்களும், புதுச்சேரிக்கு 3 இடங்கள்.
 
வயது வரம்பு: 1.5.2014 அன்று 20 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
 
28 வயதை கடக்காதவராக இருப்பது அவசியம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், அதாவது 33 வயது வரையிலும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், அதாவது 31 வயது வரையிலும் அனுமதிக்கப்படும்.
 
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள், மற்றும் பட்டப்படிப்பு இறுதி பருவத்தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 
கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும், முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.450.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.6.2014
 
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.sbi.co.in

வெப்துனியாவைப் படிக்கவும்