சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேல் நிலைக்கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
மேற்படி மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் 25-ந் தேதி அன்று அளிக்கப்பட உள்ளதால் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நான்கு வேலைநாட்களில் திருவல்லிக்கேணி, காமராஜர் சாலையில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி (விவேகானந்தர் இல்லம் அருகில்) மற்றும் தங்கசாலை அரசு தொழில்பயிற்சி நிலையம் ஆகிய 2 மையங்களில் வேலைவாய்ப்பு பதிவிற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பதிவுக்கு வரும் மாணவ, மாணவியர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவை கொண்டு வருதல் வேண்டும்.