பல்கலைகழக தேர்வில் காமதேனு கல்லூரி சாதனை

புதன், 1 ஜூலை 2009 (19:32 IST)
ஈரோடு : பாரதியார் பல்கலைகழக தேர்வில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

பராதியார் பல்கலை கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பருவ தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் அதிக பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வணிகவியல் துறையில் 14 தாள்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 86.36 சதவீதமும், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 95.65 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆடை வடிவமைப்பு துறையில் 17 தாள்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலாண்மை துறையில் நான்கு தாள்களில் 100 சதவீதமும் மீதி தாள்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணிணி அறிவியல் துறையில் 25 தாள்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். எச்.டி.எம்.எல். தாளில் மூன்று மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கான முதல் பகுதி தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் பகுதி ஆங்கிலத்தில் 90 சதவீதமும் ஒட்டுமொத்தமாக கல்லூரி 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை கல்லூரியின் தலைவர் ஆர்.பெருமாள்சாமி, முதல்வர் பேராசிரியர் வி.சிவானந்தம் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாராட்டினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்