சேவாலயாவின் இலவச தையற்பயிற்சி மற்றும் கணினிப்பிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா
வியாழன், 7 ஜூன் 2012 (17:38 IST)
FILE
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள வாடாநல்லூரில் 06.06.2012 அன்று காலை 11.00 மணியளவில் இலவச தையற்கலைப்பயிற்சி மற்றும் கணினிப் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி. சுமதி குணசேகரன (பேரூராட்சி மன்ற் தலைவி, உத்திரமேரூர்) கலந்துகொண்டு தையல்பயிற்சி முடித்த கிராம பெண்களுக்கும் மற்றும் கணினிப்பயிற்சி முடித்தவிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
மேலும் அவர் பேசுகையில் சேவாலயா அறக்கட்டளையானது எங்களது வாடாநல்லூர் கிராமத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றது.
குறிப்பாக கிராமப்புற பெண்கள் மேம்பாட்டிற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு சிறந்த சேவைகளை செய்து வருகின்றது. தையல்பயிற்சி மற்றும் கணினிப்பயிற்சி மூலமாக பெண்கள் பல்வேறு ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரிந்து, தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.
மேலும் சேவாலயாவின் சேவைகள் இன்னும் பல்வேறு கிராமங்களில் விரிவுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் திரு.மதுரைமுத்து (உத்திரமேரூர் பேரூராட்சி உறுப்பினர், 9 வது வார்டு, வாடாநல்லூர்), திரு. தேவராஜ் (ள்JP மாநில பொதுச்செயலாளர்) , திரு.ஜெயச்சந்திரன் (வாடாநல்லூர்), திரு.வெங்கடேசன் (கவுன்சிலர், நல்லூர்), ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திரு.ஆ.ஆ.கிங்ஸ்டன் சேவாலயாவின் மையப்பகுதிப் பொறுப்பாளர் சிறப்பு விருந்தினரை வரவேற்க, திரு.ள்.லோகநாதன் காந்தி குழு உறுப்பினர் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.