எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை நீக்கத் திட்டம்: கபில் சிபல்

வியாழன், 25 ஜூன் 2009 (12:19 IST)
மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், தேர்வு மூலம் மாணவர்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு பதிலாக, மாற்று வழிமுறை வகுக்கப்படும் என்றார்.

எனினும், மாநில கல்வித்துறையிடம் கருத்துக் கேட்ட பின்னரே 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்