சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை சென்னை மண்டல துணை இயக்குனர் (பொறுப்பு) டி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 25-ந் தேதி தொடங்குகிறது.
உரிய நாட்களுக்குள் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அருகில் உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஹால்டிக்கெட் வழங்கப்படும் இடங்கள் கல்வி மாவட்டங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - அறிஞர் அண்ணா நகராட்சி உயர்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
காஞ்சீபுரம் - டாக்டர் பி.எஸ்.எஸ். மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.
திருவள்ளூர் - ஸ்ரீ லட்சுமி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.
தென் சென்னை - மதரஸா-ஐ.ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணா சாலை, சென்னை (ஸ்பென்சர் சிக்னல் அருகில்).
மத்திய சென்னை - சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர்.
கிழக்கு சென்னை - ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு.
வட சென்னை - பெண்டிங் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி.
ஹால்டிக்கெட்டை வாங்கும்போது, அதில் பெயர், பிறந்த தேதி, தேர்வு மையம், பாடங்கள், தேர்வு நாள் ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் உரிய ஆதாரங்களுடன் சென்னை மண்டல இயக்குனரை நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் ஹால்டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது.
தேர்வு எழுதும் முதல் நாளன்று, சுயமுகவரி எழுதப்பட்ட, ரூ.30 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட பெரிய தபால் கவரை தவறாமல் தேர்வு மைய பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.