ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்தில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
வியாழன், 11 ஜூன் 2009 (14:59 IST)
சென்னையில் உள்ள ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்தில், பேஷன் டிசைன் டெக்னாலஜி, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள குறிப்பில், மத்திய அரசின் ஜவுளித்துறையைச் சேர்ந்த ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையத்தில் புதிய வகுப்புகள் வரும் ஜூலையில் துவங்க உள்ளது. இப்படிப்புகளுக்கு 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.