தமிழக மாணவ-மாணவிகள் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் உயர்கல்வி பயிலவும், விசா பெறுவது தொடர்பாகவும் அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளையானது (யுசுபி) வழிகாட்டி கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு அமெரிக்கா சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மாணவர் விசா பெறுவது பற்றிய ஒருநாள் வழிகாட்டி கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மிïசிக் அகாடெமியில் நேற்று நடந்தது.
இந்த கருத்தரங்கில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக உயர் அதிகாரி டேவிட் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க கல்லூரிகள், கல்வி கட்டணம், சேர்க்கை முறை, மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் விதம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு அவர் விளக்கிக் கூறினார். அமெரிக்க கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விசா விண்ணப்பத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பிக்கக்கூடாது என்று அவர் எச்சரிக்கையும் விடுத்தார். விசா தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கும் அவர் பதிலும் விளக்கமும் அளித்தார்.