பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், நரேந்திர மோடிக்கும், பொது தேர்தலில் ஆச்சரியத்தக்க வெற்றி பெற்ற பாஜகவுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இன்று மதியம் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்துப் பேசிய நவாஸ் ஷெரிப், தன்னுடைய வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். மேலும், ஒரு ஆச்சர்யத்தக்க வெற்றியை தனதாக்கிக் கொண்ட பாஜகவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தனது உரையாடலின் போது மோடியை, பாகிஸ்தானுக்கு அழைத்ததாகவும் தெரிகிறது.
தன்னுடைய உரையாடலின் போது, ஷெரிப் இந்திய நாடாளுமன்ற தேர்தலை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்ததாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டின் வறுமைக்கு எதிராக போராடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசியதை நவாஸ் ஷெரிப் நினைவு கூர்ந்ததாக பாகிஸ்தான் அரசு செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.