மீரட் தொகுதியில் போட்டியிட்ட நடிகை நக்மா, வெறும் 13,222 வாக்குகள் மட்டுமே பெற்று பாஜக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களைக் காட்டிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மீரட் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் 1,67,298 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முகமது ஷாகித் அக்லக் 91,894 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஷாகித் மன்சூர் 64,001 வாக்குகளும் பெற்றனர்.