பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா, வாரணாசி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவு வெளியானதும் அவர் வதோதரா சென்று நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார். அதேபோல் இன்று மாலை வாரணாசி சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
இன்று டெல்லி வந்த மோடி, பாஜக தலைமை அலுவலகம் சென்று கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இன்று மாலை வாரணாசி சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து விமானத்தில் பாபட்பூர் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வாரணாசி செல்கிறார்.
பின்னர் டெல்லி திரும்பும் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது பாஜக அமைச்சரவை பற்றியும், அமைச்சர்கள் நியமனம் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார்.