பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான 2ஆம் கட்ட கல‌ந்தா‌ய்வு இ‌ன்று துவக்கம்

வியாழன், 30 ஜூலை 2009 (12:00 IST)
பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான 2ஆம் கட்ட கல‌ந்தா‌ய்வு இன்று துவங்கியது. ஆகஸ்‌‌ட் 10ஆ‌ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என உய‌ர் க‌ல்வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி தெரிவித்துள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், முதற்கட்ட கல‌ந்தா‌ய்வில் 161-க்கும் அதிகமாக கட்-ஆஃப் மார்க் எடுத்த மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் 58 ஆயிரத்து 369 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 44 ஆயிரத்து 713 பேர் இடங்களை தேர்ந்து எடுத்துள்ளனர். 15 ஆயிரத்து 135 பேர் கல‌ந்தா‌ய்வு‌க்கு வரவில்லை.

இந்தாண்டு 2ஆம் கட்ட பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு இன்று தொடங்கி ஆகஸ்‌‌ட் 10ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ்2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 11ஆ‌ம் தேதி கல‌ந்தா‌ய்வு துவங்குகிறது. விண்ணப்பம் வருவதை பொறுத்து கல‌ந்தா‌ய்வு தேதி அதிகரிக்கப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்