புதிதாக 27 மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்க இ.எஸ்.ஐ திட்டம்

செவ்வாய், 21 ஜூலை 2009 (17:20 IST)
நாடு முழுவதும் புதிதாக 27 மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் ஹரீஷ் ராவத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (இ.எஸ்.ஐ) கீழ் பயனடையும் தொழிலாளர்களின் மருத்துவ வசதிக்காக புதிய மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஎஸ்ஐ மருத்துவத் திட்டம் அமல்படுத்தப்படும் இடங்களில் இந்தக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஹரீஷ் ராவத் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்