டி.என்.பி.எஸ்.சி சிறப்பு குரூப்-4 தேர்வுத் தேதியில் மாற்றம்

புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:13 IST)
இம்மாதம் 30ஆ‌ம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பு குரூப்-4 தேர்வு, வரும் அ‌க்டோப‌ர் 11ஆ‌ம் தே‌தி‌‌க்கு த‌ள்‌ளி வை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான சிறப்பு குரூப்-4 தேர்வு வரு‌ம் 30ஆ‌ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இத்தேர்வு அக்டோபர் 11ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் செப்டம்பர் 15ஆ‌ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. செயலர் ரமேஷ் சந்த் மீனா தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்