கனடா பல்கலை.யுடன் இந்திய பயிர் பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்
திங்கள், 27 ஜூலை 2009 (16:05 IST)
கனடாவைச் சேர்ந்த மணிதோபா பல்கலைக்கழகத்துடன், இந்திய பயிர் பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பயிர் வளர்ச்சிக்கான இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IICPT) இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுடெல்லியில் சமீபத்தில் நடந்த சந்திப்பின் போது, உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் சுபோத் கந்த் சஹாய் முன்னிலையில், IICPT இயக்குனர் கே.அழகு சுந்தரமும், மணிதோபா பல்கலையின் துணைத் தலைவர் (ஆய்வு) திக்வீர் ஜெயாசும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பிற்கும் இடையே ஆய்வு தொடர்பான பணிகள், பயிற்சி, பாடத் திட்டம், கல்வி நிறுவன மேம்பாடு, தகவல் பரிமாற்றம், ஆசிரியர்-மாணவர் பரிமாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.