கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னால்ஜி கல்வி நிறுவனம் துவங்கப்பட்ட 50 ஆண்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் விதமாக பொன்விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில், எத்தியோப்பியா, வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளில் கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் பல்வேறு கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளன.
வீடியோ கான்பரன்சிங் மூலம் எத்தியோப்பியா நாட்டில் உள்ள மாணவர்களுக்கு கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் வகுப்பு நடத்த வேண்டும் என இந்தியாவுக்கான எத்தியோப்பியா நாட்டின் தூதர் ஜேனட் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது கான்பூர் ஐ.ஐ.டி.யில் 4 எத்தியோப்பிய மாணவர்கள் மட்டுமே எம்.டெக் படிப்பில் பயின்று வருவதாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான எத்தியோப்பிய மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் தூதர் ஜேனட் வலியுறுத்தியுள்ளார்.
பயோ-மெடீரியல் மற்றும் பயாலஜிக்கல் அறிவியல் துறையில் தங்கள் நாட்டுடன் இணைந்து கான்பூர் ஐ.ஐ.டி செயல்பட வேண்டும் என வியட்நாம் தூதர் கோரியுள்ளார்.