ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனத்தில் விதிமீறல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

புதன், 22 ஜூலை 2009 (17:37 IST)
சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனராக டாக்டர் எம்.எஸ்.அனந்த் நியமிக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக எம்.எஸ்.அனந்த் நியமிக்கப்பட்டதில் ஐ.ஐ.டி. விதிகள் மீறப்பட்டுள்ளதாக இ.முரளிதரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, அனந்தின் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்தார்.

இதனை எதிர்த்து அனந்த் உட்பட சிலர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் முகோபத்யாயா, தனபாலன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

மனு மீதான விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக எம்.எஸ்.அனந்த் நியமிக்கப்படுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக கல்விப்பிரிவின் அனுமதி உட்பட அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 1962 அமல்படுத்தப்பட்ட ஐ.ஐ.டி. இயக்குனர் நியமன விதிமுறைகளின் படியே சென்னை ஐ.ஐ.டி. இயக்குனராக அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனம் செல்லாது எனக் கூறிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுவதாக கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்