எல்.எல்.பி. முடித்த பெண்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு
சட்டப்படிப்பில் (L.L.B.) இளங்கலைப் பட்டம் பெற்ற பெண்களுக்கு இந்திய ராணுவத்தில் குறுகியகால பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எல்.எல்.பி. பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். உயரம் 152 செ.மீ. இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை indianarmy.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “Additional Directorate General Of Recruiting (Women Entry Section), West Block.III, R.K.Puram, New Delhi-110 066” என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.