மைதானத்திலேயே கபடி வீரர் உயிரிழப்பு...சோக சம்பவம்

செவ்வாய், 26 ஜூலை 2022 (14:08 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பெரியபுறங்கால் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ்(21). இவர் அங்குள்ள தனியார்  கல்லூரியில் பிஎஸ்.சி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கு கபடி விளையாட்டில் இருந்த தீவிர ஆர்வம் காரணமாக சேலத்தில் உள்ள அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.

இந்த  நிலையில்,    நேற்று பண்ருட்டி, மானடிகுப்பத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல்ராஜ் கலந்துகொண்டு விளையாடினார். அதில், கீழகுப்பம் கிராம எதிர் அணி வீரரை பிடிக்க சென்ற போது விமல்ராஜ் மார்பில் அடிபட்டு கீழே விழுந்து சுய  நினைவு இழந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிடிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை  செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்