நேற்று முன் தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில், நியூஸிலாந்திற்கு எதிராக இந்திய அணி மோதியது. அப்போது மழை குறுக்கிட்டதால் மீதமுள்ள ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களுக்கு 240 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியது. இதனை கேலி செய்யும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியை கேலி செய்து, இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கில் வாகன் ஒரு கேலி சித்திரத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ரசிகர்கள் கோலியை ‘கிங் கோலி’ அன்று அழைப்பதை கேலி செய்யும் விதமாக, கோலி ராஜ உடை ஒன்று அணிந்து ஒரு நாற்காலியில் உட்கார்ந்துள்ளார். அவரது ஒரு கையில் பந்தும், மற்றொரு கையில் இந்தியாவுக்கான விமான டிக்கெட்டும் உள்ளது. அவருக்கு பின்புறம், ”ICC World cup winners 1983, 2011” என்று அச்சிடப்பட்ட ஃப்ரேம் ஒன்றும், அவருக்கு அருகில் அவரது பேர் பொரிக்கப்பட்ட ஷீல்டு ஒன்று உள்ளது.
இந்த புகைப்படத்திற்கு கீழே பல கிரிக்கெட் ரசிகர்கள் கம்மெண்ட் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு இந்திய ரசிகர், ’இந்திய வீரர்கள் விமானத்தில் போவார்கள், உங்கள் வீரர்கள் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் தோற்று ஆட்டோவில் போவார்கள்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.