உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும், உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் இரு அணிகளில் எந்த அணி இறுதிப்போட்டிய்ல் வெற்றி பெற்றாலும் அந்த அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது., பின்னர் 224 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஞாயிறு அன்று நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இறுதி போட்டியில் மோதவுள்ளது