CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Senthil Velan

சனி, 18 மே 2024 (14:21 IST)
பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்புள்ளதால், சென்னை பெங்களூர் இடையேயான போட்டி இன்று நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டு போட்டி ரத்து செய்யப்பட்டால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சென்னை அணிக்கு அதிக வாய்ப்புள்ளது.
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 67 லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை மற்றும் பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணி யார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
 
சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேநேரம், பெங்களூர் அணி குறிப்பிட்ட வரம்புகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பொழிவால் போட்டி கைவிடப்பட்டால் சென்னை அணி தான் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றால், பெங்களூர் அணி எப்படி வெற்றி பெற வேண்டும் என சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அப்படி நடந்தால் மட்டுமே பெங்களூர் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்