ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த போட்டியில் ஆர் சி பி அணி 20 ஆவது ஓவரை க்ருணாள் பாண்ட்யாவை வீசவைத்தது. அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார்.ஆனால் புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு தலா ஒரு ஓவர்கள் இருந்தும்- அவர்கள் நேற்றைய போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியும் ஏன் அவர்களை அந்த ஓவரை வீச அழைக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் கடைசி ஓவரில் தோனி சிக்ஸ் அடிக்கவேண்டும் என்பதற்காகவே ஒரு சுழல்பந்து வீச்சாளரை வீச வைத்தது போல இருந்தது எனவும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.