சூர்யகுமார் தன்னுடைய வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்… முன்னாள் வீரர் ஆதங்கம்!

திங்கள், 31 ஜூலை 2023 (09:32 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் “மோசமாக விளையாடி வரும் அவருக்கு இறுதி ஒருநாள் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும், ஆனால் அதுவே கடைசி வாய்ப்பாக அமையும்” என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் “சூர்யகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் காயத்தில் மீண்டு வருவதற்குள் தன்னை நிரூபித்துகொள்ள வேண்டும். ஆனால் அவர் தனக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டு வருகிறார். அவர்கள் இருவரும் அணிக்குள் வந்தால் கண்டிப்பாக சூர்யகுமார் வெளியேற வேண்டி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்