ரஜினி ஸ்டைலை மைதானத்தில் வெளிப்படுத்திய வீரர்

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (23:47 IST)
விஜய் ஹசாரே தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மத்திய பிரதேசம்- சண்டிகர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செயத் மத்திய பிரதேசம் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ரன்கள் அடித்தது.

இந்த அணியின் வீரர் வெங்கடேஷ் அய்யர்113 பந்துகளில்  150 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த ஆண்டில் அவரது 2 வது சதம் இதுவாகும்.

பின்னர் ஆடிய சண்டிகர் அணி 50 ஓவர்கள் முடிவில் 326 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் அய்யர், சதம் அடித்தது,  நேற்று சூப்பர் ஸ்டாரிடன் பிறந்தநாளுக்கு தனது சதத்தை அர்ப்பணிக்கும் பொருட்டு அவரது ஸ்டைலை செய்து காட்டினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்