ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக டாடா – விவோவுக்கு டாட்டா!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:40 IST)
ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக முதல்முறையாக டாடா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான கிரிக்கெட் சீசனாக இருந்து வருகிறது. ஏற்கனவே ஐபிஎல்லில் 8 அணிகள் உள்ள நிலையில் தற்போது புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த பல வருடங்களாக சீன நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக இருந்து வருகிறது. இடையே ஒரு சீசனுக்கு மட்டும் ட்ரீம்11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. தற்போது விவோ நிறுவனம் 2023 வரை ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அதற்கு பிறகு விவோவிற்கு பதிலாக டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டாடாவை டைட்டில் ஸ்பான்சராக்குவது குறித்து நடந்து முடிந்த ஐபிஎல் ஆலோசனை குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்