நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 217 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ரிக்கல்ட்டன் ஆகியோர் அரைசதமடிக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தனர்.
இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளோடு முதல் இடத்துக்கு சென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாகப் பெறும் ஆறாவது வெற்றி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.