“சூர்யகுமார் யாதவ்வை மூன்றாவது இடத்தில் இறக்கக் கூடாது…” அஸ்வின் சொல்லும் காரணம்!

சனி, 19 நவம்பர் 2022 (16:05 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ்வை எந்த இடத்தில் களமிறக்குவது என்பது குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.

இந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் கடந்த ஒரு ஆண்டாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 170க்கும் மேல் உள்ளது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டியிலும் மிகச்சிறப்பாக விளையாடி வரும் அவர் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கோலி இல்லாததால், சூர்யகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் இறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுபற்றி பேசியுள்ள அஸ்வின் “ஸ்ரேயாஸைதான் மூன்றாம் இடத்தில் இறக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ்வை நான்காவது இடத்தில் இறக்கினால் மீண்டும் அணியில் குழப்பம் ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்