அவர எப்பதான் டெஸ்ட் அணியில எடுக்க போறீங்க… இந்திய தேர்வுக்குழுவை சாடிய கவாஸ்கர்!

சனி, 24 ஜூன் 2023 (07:09 IST)
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு செல்லும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிவரும் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை.

இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்துள்ளார். அதில் “அவர் தொடர்ந்து 3 ரஞ்சி கோப்பை சீசன்களில் 100 ரன்களுக்கு மேல் சராசரியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள். அவரை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. 15 பேர் கொண்ட அணியிலாவது சேர்த்து அவரின் திறமையை அங்கீகரித்ததாக அவரிடம் உணர்த்த வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் , அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்