பாபர் அசாம் உலகக்கோப்பையை வென்றால் பாகிஸ்தான் பிரதமர் ஆவார்… கவாஸ்கரின் ஜாலி கமெண்ட்ரி!

சனி, 12 நவம்பர் 2022 (10:26 IST)
பாகிஸ்தான் அணி நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் பாபர் ஆசாம் இம்ரான் கானைப் போல பிரதமர் ஆவார் என கவாஸ்கர் ஆருடம் கூறியுள்ளார்.

சூப்பர் 12 லீக் சுற்றில் முதலில் மோசமாக விளையாடி வந்த பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவின் புண்ணியத்தில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்றுள்ளது.

1992 ஆம் ஆண்டு உலககோப்பை பைனல் போலவே இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்நிலையில் பாபர் ஆசாம் இந்த உலகக்கோப்பையை என்றால் அவர் இன்னும் 26 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆவார் என சுனில் கவாஸ்கர் ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.

முன்னதாக 1992 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இம்ரான் கான், 26 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு பிரதமர் ஆனார். அதை குறிப்பிட்டுதான் கவாஸ்கர் இவ்வாறு பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்