இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா தொடக்கத்தில் நிதானமாக விளையாடவேண்டும் என அறிவுரைக் கூறியுள்ளார். அதில் “அவரிடம் இருக்கும் ஷாட் தேர்வுகளை பார்க்கும்பொழுது அவர் புதிதாக எதையும் முயற்சி செய்யவேண்டாம் எனத் தோன்றுகிறது. அவர் தேவையில்லாமல் தன் விக்கெட்டை இழக்கக் கூடாது. அவர் தொடக்கத்தில் நிதானமாக விளையாட வேண்டும். ஆனால் இதை அவர் முழு இன்னிங்சையும் முடிக்கும் போது மும்மடங்காக்கி விடுவார்” எனக் கூறியுள்ளார்.