அணிக்காக எந்த இடத்திலும் ஆடத் தயார்… பேட்டிங் ஆர்டர் குறித்து ஸ்மித்!

vinoth

செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:35 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து நிலையில் அந்த அணி சரியான தொடக்க ஆட்டக்காரருக்கான தேடலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக அந்த இடத்தை நிரப்பி வந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆனால் வழக்கமாக அவர் ஆடும் நான்காம் இடத்தை விட்டு தொடக்க ஆட்டக்காரராக அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. சில போட்டிகளில் அவர் சொதப்பினார். இதனால் அவரை மீண்டும் நான்காம் இடத்துக்கே அனுப்ப அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்து பேசியுள்ள ஸ்மித் “எந்த இடத்திலும் ஆடத் தயாராக இருப்பதாக கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் கூறினேன். ஆனால் நான்காம் இடத்தில் ஆடுவதுதான் எனக்குப் பிடித்துள்ளது. அந்த இடத்தில் விளையாடும்போதுதான் அணிக்காக நிறையப் பங்களிப்பு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்