தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்துக்கு ரவி விண்ணப்பித்துள்ளார். ஆனால் ஆர்த்தி தரப்பில், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ரவி இந்த முடிவை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக விவாதங்கள் நடந்து தற்போதுதான் சர்ச்சைகள் அடங்கியுள்ளன. இந்நிலையில் ஜெயம் ரவி தற்காலிகமாக தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக சொல்லப்படுகிறது.