டான் ப்ராட்மேனின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:10 IST)
ஆஸி அணியின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.

தற்கால டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர ஸ்டீவ் ஸ்மித். அவரது பேட்டிங் சராசரி 60க்கும் மேல் உள்ளது. டான் பிராட்மேனுக்குப் பிறகு இவரது பேட்டிங் சராசரியே மிகவும் அதிகம்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று அவர் 311 பந்துகளை எதிர்கொண்டு 200 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருடைய 29 ஆவது டெஸ்ட் சதமாகும்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அவருக்கு முன்பாக இன்னும் ஹைடன், ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியொர் மட்டுமே உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்