பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணியினர், டெஸ்ட் போட்டியில், 4 வீரர்கள் சதமடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிலையில், 17 ஆண்டடுகளுக்குப் பின் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.
ஏற்கனவே, செப்டம்பரில் 7 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடந்தது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது.
இன்று, ராவல்பிண்டியில் தொடங்கிய டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் கேப்டனாக இருந்தார். இங்கிலாந்திற்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருந்தார்.
எனவே, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.
அவர்களில், சாக் கிராலி(122), பென் டக்கெட்(107), ஒல்லி போப்9108), ஹாரி ப்ரூக்(101) ஆகியோர் சதம் அடிக்கவே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது.