இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

Prasanth Karthick

ஞாயிறு, 23 மார்ச் 2025 (16:57 IST)

ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை போட்டு வெளுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதிய போட்டியில் சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடும் நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். எதற்காக பந்துவீச்சை தேர்வு செய்தார்களோ, ஆனால் சன்ரைசர்ஸ் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டி வருகிறது.

 

ஓப்பனிங் இறங்கிய அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட் அடித்து வெளுக்கத் தொடங்கிய நிலையில் பவர்ப்ளே முடிவதற்குள்ளேயே ஸ்கோர் 75ஐ தாண்டிவிட்டது. அபிஷேக் 24 ரன்களில் அவுட்டானாலும், ட்ராவிஸ் ஹெட் நின்று ஆடி 67 ரன்களில் அவுட் ஆனார். ஆனால் அடுத்து வந்த இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி தொடார்ந்து அதிரடியை தொடர்ந்து வருகின்றனர்.

 

இஷான் கிஷன் 31 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 70 ரன்களை தொட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி 14 ஓவர்களுக்கு 200 ரன்கள் என்ற ரேஞ்சில் சன்ரைசர்ஸ் உள்ளது. இந்த அதிரடியை குறைக்க முயன்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களான ஜோப்ரா ஆர்ச்சர் 57 ரன்களை விட்டுள்ள நிலையில், தீக்‌ஷனா 52 ரன்களையும், பரூக்கி 49 ரன்களையும் விட்டுள்ளனர்.

 

இப்படியே தனது அதிரடியை சன்ரைசர்ஸ் தொடர்ந்தால், கடந்த சீசனில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களாக 287 ரன்கள் அடித்த தங்களது சாதனையை தாங்களே முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்