நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

vinoth

புதன், 3 ஜூலை 2024 (07:04 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 22 வயது வீரரான ரியான் பராக் தனது திறமையான அல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் அவர் இருந்தார். அவர் 577 ரன்கள் சேர்த்துள்ளார். இதனால் அவர் மேல் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

ஆனால் அவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இடம் கிடைக்கவில்லை. இது அவருக்கு ஏற்படுத்திய அதிருப்தியை ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார். கடந்த ஜூனில் வெளியான அந்த நேர்காணலில் “நான் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை. ஏனென்றால் நான் உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுள்ள நிலையில் ஸ்ரீசாந்த் ரியான் பராக்கின் அந்த கருத்தை சாடும் விதமாகப் பேசியுள்ளார். அதில் “முதலில் தேசப்பற்று உள்ளவராக இருக்கவேண்டும். அதன் பின்னர்தான் நாம் கிரிக்கெட் காதலராக இருக்க வேண்டும். சில இளைஞர்கள் தாங்கள் அணிக்கு தேர்வு செய்யப்படாததால் உலகக் கோப்பையைப் பார்க்க மாட்டேன் என சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் இதயத்தாலும், உள்ளத்தாலும் இந்திய அணியை ஆதரிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்