இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவேன்: ஸ்ரீசாந்த் நம்பிக்கை

சனி, 17 ஜனவரி 2015 (12:19 IST)
சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், விரைவில் இந்திய அணிக்கு திரும்புவேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


 

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  ஸ்ரீசாந்த், சண்டிலா அங்கித் சவான் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதன்காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 
 
 
இந்நிலையில் ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதால், இந்த விசாரணையின் போது ஸ்ரீசாந்த் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், நடந்த விசாரணை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

என் மீது எந்த தவறும் இல்லை என பல முறை கூறியுள்ளேன். என் மீது யாரும் குற்றம் சாட்டவில்லை. புகாரிலிருந்து மீண்டு விரைவில் இந்திய அணிக்கு திரும்பிவேன் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்