டி 20 தொடரில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது. அதற்குக் காரணம் அணியில் இருக்கும் மூத்த வீரர்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் ரோஹித் மற்றும் கம்பீருக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த துணைக் கேப்டன் ஷுப்மன் கில் “நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறோம். கடைசி போட்டியில் பும்ரா இருந்திருந்தால் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். இப்பொது எழும் விமர்சனங்கள் வந்திருக்காது. நாங்கள் இருமுறை ஆஸ்திரேலிய தொடரில் வென்றுள்ளோம். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிவரை சென்றுள்ளோம். டி 20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். எங்களை விமர்சிக்கும் போது இதையெல்லாம் மறந்துவிடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.