குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பாண்ட்யாவுக்கு நன்றி தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கேப்டன் பொறுப்பேற்றுள்ள ஷுப்மன் கில் “ஒரு அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொள்ளும் போது பல பொறுப்புகள் நம் மேல் விழும். அர்ப்பணிப்புடன் இருப்பது, கட்டுப்பாடு மற்றும் அணிக்கு விஸ்வாசமாக இருப்பது போன்றவை ஒரு கேப்டனின் முக்கியமான தேவையாக நான் கருதுகிறேன்.” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ஹர்திக் பாண்ட்யாவின் செயலை சீண்டுவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.