தோனியின் ஜெர்ஸி எண்ணைக் கேட்ட கில்? அதனால்தான் பிசிசிஐ அந்த அறிவிப்பை வெளியிட்டதா?

சனி, 16 டிசம்பர் 2023 (07:05 IST)
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.

2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அவரின் ஜெர்ஸி எண்ணான 7 ஆம் நம்பர் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் ஷுப்மன் கில் இந்த ஏழாம் நம்பர் எண்ணைக் கேட்டதாகவும், அதை பிசிசிஐ மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. வேறு எந்த வீரரும் அந்த ஜெர்ஸி எண்ணைக் கேட்க கூடாது என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்